விடிய விடிய மழை - மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு

Update: 2023-12-18 04:53 GMT

வெள்ள பெருக்கு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, மேகமலை, அரசரடி, பொம்மராஜபுரம் பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழை காலை வரை தொடர்ந்தது. விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் இன்று காலை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு வந்தது. தொடர் மழையால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்னர். மூலவைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை பகுதியில் நிலத்தடிநீர் உயருவதுடன், குடிநீர் பற்றாக்குறையும் அடியோடு நீங்கியுள்ளது. இது தவிர வைகை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அணை நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News