ஆதீனம் காலில் விழுந்து வணங்கிய திமுக நகராட்சித் தலைவரால் சர்ச்சை

மயிலாடுதுறை நகராட்சித் தலைவர் தருமை ஆதீனத்துக்கு பாத பூஜை செய்து வரவேற்பு அளித்தநிலையில், விசிக.,வினர் கோஷம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-03-16 04:23 GMT

மயிலாடுதுறை நகராட்சித் தலைவர் தருமை ஆதீனத்துக்கு பாத பூஜை செய்து வரவேற்பு அளித்தநிலையில், விசிக.,வினர் கோஷம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

காசியாத்திரையை நிறைவு செய்து ஊர் திரும்பிய தருமபுர ஆதீனத்திற்கு மயிலாடுதுறை நகராட்சிமுன்பு நகரமன்ற தலைவர் ஆதீனம் காலில் விழுந்து ஆசி பெற்றார். மறுபக்கம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தை மாற்றி தருமபுர ஆதீன ஆபாச வீடியோ விவகாரத்தில் அனைத்து உண்மையான குற்றவாளிகளையும் கைது செய்யகோரி முழக்கமிட்டதால் பரபரப்பு.

மயிலாடுதுறை தருமபுரம் 27-வது ஆதீனம் , காசியில் ஞானரத யாத்திரையை நிறைவு செய்து மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்திற்கு திரும்பினார். வழியெங்கும் பொதுமக்கள் ஆதீனகர்த்தருக்கு மலர்தூவியும், பட்டாசு வெடித்தும் சிறப்பான அளித்தனர். மயிலாடுதுறை நகராட்சியில் நகர்மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் சீர்வரிசை பழதட்டுகளுடன் மலர்தூவி மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர் நகர்மன்ற தலைவர் குண்டமணி செல்வராஜ் ஆதீனத்தின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தார். 

Advertisement

அப்போது அங்கு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தருமபுர ஆதீனம் வருவதை கண்டு தங்கள் போராட்டத்தை மாற்றி முழக்கமிட்டனர். தருமபுர ஆதீனம் ஆபாச வீடியோ தொடர்பான வழக்கில் உரிய விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி கட்சியினர் முழக்கமிட்டனர். ஒருபக்கம் நகராட்சி நிர்வாகத்தினர் வரிசை பழதட்டுடன் தருமபுர ஆதீனத்திற்கு வரவேற்பு அளித்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தின் முழக்கத்தை மாற்றி ஆபாச வீடியோ உண்மையாக இருந்தால் ஆதினம் உட்பட அனைத்து குற்றவாளிகள்மீதும் நடவடிக்கை கோரி முழக்கமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News