ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 11:25 GMT
ஊழல் ஒழிப்பு உறுதிமொழியேற்பு
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்று உறுதியேற்கபட்டது. மேலும் தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிபடுத்துவதில் ஒரு முன் உதாரணமாக செயல்படுவேன் என மாவட்ட ஆட்சியர் வாசிக்க அனைத்து துறை அரசு அதிகாரிகளும் வாசித்து ஊழல்தடுப்பு உறுதிமொழி ஏற்று கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.