தேர் வடம் கூட வாங்க முடியவில்லை - எச் ராஜா குற்றச்சாட்டு!

தேர் வடம் கூட வாங்க முடியவில்லை என ஆறுமுகநேரியில் எச் ராஜா பேட்டியின் போது குற்றம் சாட்டினர்.

Update: 2024-06-25 12:19 GMT

தேர் வடம் கூட வாங்க முடியவில்லை என ஆறுமுகநேரியில் எச் ராஜா பேட்டியின் போது குற்றம் சாட்டினர்.


அறநிலையத்துறை அமைச்சரால் தேரோட்டதிற்கு வடத்தைக்கூட முறையாக வாங்க முடியவில்லை என்றால் அந்த துறை எதற்கு, துறை அதிகாரிகளுக்கு சொகுசு கார் எதற்கு? என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பினார். ஆறுமுகநேரியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 55-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர். கடந்த ஆண்டும் இதுபோன்று விஷ சாராயம் குடித்து 28 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவங்களுக்கு தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த சம்பவத்திற்கு பிறகு ஒரே நாளில் போலீசார் 4,700 லிட்டர் சாராய ஊரலை கைப்பற்றி அளித்ததாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தின் போது பெரிய மூன்று வடங்கள் அறுந்து போயுள்ளன. தொடர்ந்து திருச்செந்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட வடமும் அறுந்துள்ளது.

அறநிலையத்துறை அமைச்சரால் தேரோட்டதிற்கு வடத்தைக்கூட முறையாக வாங்க முடியவில்லை என்றால் அந்த துறை எதற்கு, துறை அதிகாரிகளுக்கு சொகுசு கார் எதற்கு?. நெல்லையப்பர் கோவில் நிர்வாக அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும். கோவில் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News