கவுன்சிலர் பெட்ரோல் கேன் உடன் தரையில் படுத்து போராட்டம்

ஆற்காடு நகராட்சியில் சஸ்பெண்ட் காலம் முடிந்தும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்காததை கண்டித்து கவுன்சிலர் பெட்ரோல் கேன் உடன் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-16 11:23 GMT

பெட்ரோல் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்

 ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் சஸ்பென் காலம் முடிந்தும் கூட்டத்தில் பங்கேற்க முறையாக அழைப்பு விடுக்காததை கண்டித்து கவுன்சிலர் ஒருவர் கையில் பெட்ரோல் கேன் மற்றும் கயிறை வைத்துக் கொண்டு தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 28 வது வார்டு உறுப்பினராக உள்ளவர் உதயகுமார். அதிமுகவை சேர்ந்த இவர், ஏற்கனவே நகர மன்ற தலைவரை கைநீட்டி பேசியதாகவும், தனது வார்டில் உள்ள நீர்நிலை மேல் தேக்க தொட்டியை உரிய அனுமதி இல்லாமல் சுத்தம் செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சஸ்பெண்ட் காலம் முடிந்தும், நகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்திற்கு தனக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என கூறி நகராட்சி ஆணையாளர் அறைக்கு முன்பாக பெட்ரோல் கேன் மற்றும் கயிறு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வந்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News