கோபிசெட்டிபாளையத்தில் வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி கோபிசெட்டிபாளையத்தில் வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-08 12:21 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள்

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தினர் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு ஆதரவாகவும், நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தியும் கோபிசெட்டிபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநில தாய்மொழியையே வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திலும் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News