சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு... சாந்தனின் உடலை கொண்டுசெல்வதற்கான இலங்கை தூரதரக அனுமதி, இறப்புச் சான்று, பயண ஆவணம், உடல் பதப்படுத்துதல் சான்று ஆகியவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அவற்றை பெற்று மத்திய அரசிடம் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் அறியுறுத்தியுள்ளது.
நான்கு ஆவணங்களும் வழங்கப்படும் பட்சத்தில் உடனடியாக உடலை விமானத்தில் அனுப்பிவைப்பதற்கான அனுமதி தாமதமின்றி வழங்கப்படும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி முகாமிலிருந்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் சென்னை மருத்துவமனையில் மரணம் அடைந்தது வரை உள்ள தகவல்களை தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது பிப்ரவரி 27ல் ஏர்
ஆம்புலன்ஸ் மூலம் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்த நிலையில், மாரடைப்பால் அவரது உடல் மோசமானது. பிப்ரவரி 28ல் மரணம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.