சிபிஎம் - திமுக மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.இதில் 5 விருப்பமான தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக விடம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தைக் குழு சந்தித்து பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சம்பத் தலைமையில், மத்திய குழு உறுப்பினர் சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன், கனகராஜ் ஆகியோர் திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
5 விருப்ப தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் 2019 தேர்தலில் கோவை மதுரை தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை தேர்தலிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடம் வலியுறுத்தியுள்ளது.