கிரிக்கெட் போட்டி: மதர் தெரசா கல்லூரி பொறியியல் அணி வெற்றி!
அண்ணா பல்கலைகழகம் நடத்திய மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசு வென்று சாதனை படைத்தனர்.;
அண்ணா பல்கலைகழகம் நடத்திய மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசு வென்று சாதனை படைத்தனர்.
அண்ணா பல்கலைகழகம் நடத்திய மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசு வென்று சாதனை படைத்தனர். அண்ணா பல்கலைக்கழகம் மண்டல அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.
இப்போட்டியில் தூத்துக்குடி வாகைகுளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியை சேர்ந்த கேப்டன் வள்ளிசாரதி தலைமையிலான அணியினர் அபாரமாக ஆடி முதல் பரிசை வென்று சாதனை படைத்தனர். மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணி மாணவர்களை ஸ்காட் கல்வி குழும இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான் கென்னடி, கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் இயக்குனர் ஜார்ஜ் கிளின்டன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.