கபாலீஸ்வரர் கோவிலில் கலாச்சார மையம்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கபாலீஸ்வரர் கோவிலில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக இன்று விளக்கமளிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-23 04:13 GMT

கபாலீஸ்வரர் கோவிலில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக இன்று விளக்கமளிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 22.80 கிரவுண்டு நிலத்தில் 26.78 கோடி ரூபாய் செலவில் கலாச்சார மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோவில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் வழக்கு தொடர்ந்தார். கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக உரிய அனுமதிகளை கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை அணுகியுள்ளதாகவும், உரிய அனுமதிகளைப் பெறாமல் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கபாலீஸ்வரர் கோவிலில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களின் ஆட்சேபங்கள் பெறப்பட்டதா என்பது குறித்து நாளை விளக்கமளிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags:    

Similar News