25 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடித்த வழக்கில் தற்போது 7 ஆண்டு சிறை

கூம்பூர் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு பஸ்சை வழிமறித்து ரூ.2.60 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் கைதானவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-11-30 12:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வேடசந்துார் : கூம்பூர் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு பஸ்சை வழிமறித்து ரூ.2.60 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் கைதானவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கூம்பூர் அருகே ரங்கநாதபுரத்தில் 1998ல் மதுரையில் இருந்து ஈரோடு சென்ற அரசு பஸ்சை வழிமறித்து மிளகாய் பொடி துாவி, கத்தியை காட்டி மிரட்டி ரூ.2.60 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ராமநாதபுரம் கீழத்துாவல் பகுதியைச் சேர்ந்த போஸ் 55, வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். இதனிடையே ஊருக்கு வந்து தனியார் ஆலையில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு விபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இது கூம்பூர் சிறப்பு எஸ்.ஐ., சந்திரசேகருக்கு தெரிய வர அவரை கைது செய்து திண்டுக்கல் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். பஸ் கொள்ளை வழக்கில் தொடர்புடைய இவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அவர் தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News