நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் டி3 திரைப்பட இயக்குனருக்கு சிறை தண்டனை
நீதிமன்ற உத்தரவை மீறி 'டி 3' திரைப்படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்ட பட இயக்குனருக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாத சிறை தண்டனை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Update: 2024-04-07 01:33 GMT
நீதிமன்ற உத்தரவை மீறி, படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டதாக கூறி, பட இயக்குனர் பாலாஜி, தயாரிப்பாளர் மனோஜ் ஆகியோருக்கு எதிராக சாமுவேல் காட்சன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான இயக்குனர் பாலாஜி, நீதிமன்ற உத்தரவை மீறி படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டதை ஒப்புக் கொண்டார். நீதிமன்றத்தில் ஆஜராகாத தயாரிப்பாளர் மனோஜுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க பதிவுத்துறைக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். வழக்கின் விசாரணை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.