சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில் : ரயில்வேக்கு கோரிக்கை!

தூத்துக்குடி இருந்து சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-04-27 04:57 GMT

 ரயில்

இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி செயலாளர் ஆர். கோடீஸ்வரன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் மா. பிரம நாயகம் ஆகியோர் தெற்கு ரயில்வே மதுரை கூடுதல் கோட்ட மேலாளர் சி.செல்வத்தை மதுரை கோட்ட அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடியிலிருந்து தினசரி மைசூரு, சென்னை ரயில்கள் புறப்பட்டு செல்கிறது. இந்த ரயில்கள் அனைத்தும் மே- ஜூன் (2024) மாதங்களில் அதிகமாக காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் முகமாக தூத்துக்குடி இருந்து சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு காலையில் "வந்தே பாரத் ரயில்" தினசரி இயக்க வேண்டும். மேலும், காலையில் வண்டி எண் 06667-06668 திருநெல்வேலி -தூத்துக்குடி- திருநெல்வேலி பெட்டிகளை வைத்து தூத்துக்குடி - மதுரை இடையே பகல் நேர சிறப்பு ரயில் இருக்க வேண்டும். ரயில்வே வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் மற்றும் திருநெல்வேலி- பாலக்காடு , திருநெல்வேலி "பாலருவி விரைவு ரயிலை"யும் உடனடியாக தூத்துக்குடி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்டி எண். 06125-06126 திருச்சியில் இருந்து காலை புறப்படும் காரைக்குடி / வண்டி எண். 06885-06886 மானாமதுரை அருப்புக்கோட்டை விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும். தாங்கள் மேற்க்காணும் கோரிக்கைகளை விரைவாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News