அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது.

Update: 2024-05-25 00:58 GMT

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது.


தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 2,58,527 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 2,58,527 மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர்.

அதில் 2,11,010 கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் பெற்றவர்கள் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை கல்லூரிகளுக்கு வரும் 27 ஆம் தேதி அனுப்பி வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

அதன் பின்னர் ஜூன் 10 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு அதனைத் தொடர்ந்து ஜூன் 24 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்த பின்னர் ஜூலை 3 ஆம் தேதி இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News