உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பில் வழங்கப்படும் - ஈபிஎஸ்

Update: 2024-06-20 08:21 GMT

எடப்பாடி பழனிசாமி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

''அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் பலமுறை எஸ்.பி.யிடம் விஷ சாராய விற்பனை குறித்து புகார் தெரிவித்துள்ளார். கஞ்சா, விஷச்சாராய விற்பனை இப்பகுதியில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது; புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பில் வழங்கப்படும். உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுகவே ஏற்கும்.

விஷச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு போதாது; ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்'' என கள்ளக்குறிச்சியில் ஈ.பி.எஸ். பேட்டியளித்துள்ளார்.

Tags:    

Similar News