மானிய கோரிக்கை மீதான விவாதம் - ஜூனில் சட்டப்பேரவை கூட்டம்

மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழக சட்டப்பேரவை ஜூன் 2வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-05-03 06:42 GMT

தமிழக சட்டப்பேரவை 

தமிழக சட்டசபைக் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடைபெற்றது. அதில் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் அமைச்சர்கள் பதிலளித்தனர். இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சட்டசபை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் ஜூன் 4 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் ஜூன் இரண்டாவது வாரம் நடைபெறக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது
Tags:    

Similar News