டிசம்பர் 6... மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு

டிசம்பர் 6-ம் தேதியையொட்டி சேலத்தில் மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, ரயில்களில் தீவிர சோதனை நடக்கிறது.

Update: 2023-12-05 10:16 GMT

டிசம்பர் 6-ம் தேதியையொட்டி சேலத்தில் மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, ரயில்களில் தீவிர சோதனை நடக்கிறது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (6-ந் தேதி) கடைபிடிக்கப்படுகிறது . இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக மக்கள் கூடும் இடங்களில் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையொட்டி சேலத்தில் கோவில்கள், ஆலயங்கள், மசூதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலைங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பயணிகள் உடமைகள் அனைத்தும் சோதனைக்கு பிறகே ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

சேலம் வழியாக செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், குர்ல்லா எக்ஸ்பிரஸ் , மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், மும்பை தாதர் எக்ஸ்பிரஸ், கண்ணனூர்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் உள்பட சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் பயணிகளின் உடமைகள் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News