மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 796 கன அடியாக சரிந்தது.

Update: 2023-12-28 03:10 GMT

மேட்டூர் அணை

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 796 கன அடியாக சரிவு. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீரில் வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 1,295 கன அடியாக இருந்த நிலையில் ,நேற்று 1,098 கன அடியாகவும், இன்று 796 கன அடியாகவும் குறைந்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.09 அடியில் இருந்து 71.13 அடியாக உயர்ந்துள்ளது.நீர்இருப்பு 33.67 டிஎம்சியாக உள்ளது.குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது
Tags:    

Similar News