நிர்மலா சீதாராமன் பற்றி அவதூறு : இனியவன் மீது தேசிய மகளிர் ஆணையம் புகார்

நிர்மலா சீதாராமன் பற்றி அவதூறு பேசிய இனியவன் மீது தேசிய மகளிர் ஆணையம் புகார் மனு அளித்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து மூன்று நாட்களில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.;

Update: 2024-06-24 02:50 GMT
  • whatsapp icon
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறு பேசியதற்காக தேசிய மகளிர் ஆணையம் இனியவன் மீது புகார் முன் வைத்துள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் என்றும், 3 நாட்களில் விரிவான அறிக்கை அனுப்ப டிஜிபிக்கு ரேகா சர்மா கடிதம் அனுப்பியுள்ளார். சென்னை பெருங்குடியில் கடந்த 17 ஆம் தேதி திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேச்சாளர் இனியவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார். இந்த பேச்சால் தமிழக பாஜக தொண்டர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News