உயர் அழுத்த மின்கோபுரம் அமைத்த இடத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைத்த இடத்திற்கு உரிய இழப்பீடு, ஊக்கத்தொகை வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-01-05 03:07 GMT
ஆர்பாட்டம்
உயர் அழுத்த மின்கோபுரம் அமைத்த இடத்திற்கு உரிய இழப்பீடு, ஊக்கத்தொகை வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்மின்கோபுரம் அமைத்த விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். உயர் மின்கோபுரம் அமைத்த நிலங்களுக்கு இழப்பீட்டுடன் சேர்த்து கூடுதல் இழப்பீட்டு தொகை, ஊக்கத்தொகை ஆகியவை வழங்க வேண்டும், புதிய மின்திட்டங்களை சாலை ஓரங்களில் கேபிள் மூலம் புதைத்து செயல்படுத்த வேண்டும், 2013 நில எடுப்பு சட்டப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர்.