அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களை பதவி இறக்கம் செய்தது சட்டவிரோதமானது
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பதவி இறக்கம் செய்தது சட்டவிரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-04-12 10:06 GMT
உபரிப் பணியாளர்கள் எனக் கூறி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 4,450 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பதவி இறக்கம் செய்தும், ஊதியக் குறைப்பு செய்தும் அரசு பிறப்பித்த உத்தரவுகள் சட்டவிரோதமானது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நான்கு வாரங்களில் பழைய பதவிகளில் அவர்களை நியமிக்கவும், பழைய ஊதியத்தை வழங்கவும் பதவி இறக்கம், ஊதிய குறைப்பு உத்தரவுகளை எதிர்த்த வழக்குகளில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
எந்த விசாரணையும் நடத்தாமல் பதவி இறக்கமும் ஊதியக் குறைப்பும் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.