உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? - முதல்வர் ஸ்டாலின் பதில்

Update: 2024-08-05 16:00 GMT

முதல்வர் ஸ்டாலின் 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டங்களை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கொளத்தூர் துணை மின் நிலையம், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். 

Advertisement

அப்போது உதயநிதி துணை முதலமைச்சராவாரா என்பது குறித்தான கேள்வி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலிப்பாரா? என்ற கேள்வி முதலமைச்சரிடம் வைக்கப்பட்டது.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்திருக்கிறது. ஆனால், பழுக்கவில்லை'' என தெரிவித்தார்.

Tags:    

Similar News