வேளாண்மை துணை இயக்குநர் திட்டப் பணிகள் ஆய்வு
அரியலூரில் வேளாண்மை துணை இயக்குநர் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
Update: 2024-05-04 15:00 GMT
அரியலூர், மே.5- ஜெயங்கொண்டம் வட்டார வேளாண் துறை செயல்படுத்தி வரும் உழவர் நலத்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அரியலூர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் கணேசன் ஆய்வு மேற்கொண்டார். தத்தனூர் கிராமத்தில் கோடைகால பயிர்கள் சாகுபடி திட்டத்தின் கீழ் விவசாயி பாஸ்கர் 2 ஏக்கரில் சாகுபடி செய்துள்ள டிஎம்வி-4 இரக எள் சாகுபடி திடலைப் பார்வையிட்டு மகசூல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை விளக்கினார். பின்னர் மீன்சுருட்டியில் இயங்கி வரும் வேளாண் துணை விரிவாக்க மையக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார். பிள்ளை பாளையம் கிராமத்தில் விவசாயி .ஜோதி 8 ஏக்கரில் இயந்திர நடவு முறையில் சாகுபடி செய்துள்ள கோ.ஆர்-51 ரக நெல் வயல்களில் ஆய்வு மேற்கொண்டு களை நிர்வாகம், நீர் நிர்வாகம் மற்றும் பூச்சி நோய் நிர்வாக முறைகள் குறித்து விளக்கி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். ஆய்வின் போது வட்டார வேளாண் அலுவலர் மகேந்திரவர்மன், துணை வேளாண் அலுவலர் அந்தோணி ராஜ், உதவி வேளாண் அலுவலர்கள் ராம்குமார், பாலாஜி, கிடங்கு மேலாளர் வருண் குமார், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் மகேஷ் குமார், முன்னோடி விவசாயிகள் உடனிருந்தனர்.