மோடியின் தமிழக சுற்றுப்பயணம் குறித்த விபரம்

பிரதமர் மோடி வரும் 28ம் தேதி தமிழகம் வரவுள்ள நிலையில், தூத்துக்குடி, நெல்லை என பல்வேறு விழாக்களில் பங்கேற்கவுள்ள பயண விபரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-02-22 06:58 GMT

 பிரதமர் மோடி வரும் 28ம் தேதி தமிழகம் வரவுள்ள நிலையில், தூத்துக்குடி, நெல்லை என பல்வேறு விழாக்களில் பங்கேற்கவுள்ள பயண விபரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27 மற்றும் 28 ஆம் தேதியில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதுடன் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார். மேலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்லடம் மற்றும் நெல்லையில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27ஆம் தேதி பிற்பகல் 1:20 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து கிளம்பி 2:05- க்கு கோவை சூலூர் விமான நிலையம் வந்தடைகிறார். பின்பு 2:10 மணிக்கு சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் 2:30 மணிக்கு பல்லடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து அடைகிறார்.

இதைத்தொடர்ந்து 2:45 மணிக்கு என் மண் என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து பொதுக்கூட்டம் முடிந்த பிறகு 3:50 மணிக்கு சாலை மார்க்கமாக பல்லடம் ஹெலிபேட்டில் இருந்து மதுரை ஹெலிகாப்டர் தளத்திற்கு 5 மணிக்கு வந்தடைகிறார். பின்பு மாலை 5:15 மணி முதல் 6:15 மணி வரை மதுரையில் உள்ள டிவிஎஸ் தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் பிரதமர் பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறும் சிறு குரு தொழில் முனைவர்களுக்கான டிஜிட்டல் நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார். இதைத் தொடர்ந்து 6:15 மணிக்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர் 6:45 மணிக்கு மதுரையில் உள்ள ஹோட்டல் தாஜ்ஜில் தங்குகிறார் அங்கு அன்றைய தினம் அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்திக்கிறார். இது தொடர்ந்து வருகிற 28ஆம் தேதி மதுரை ஹோட்டல் தாஜ்ஜில் இருந்து 8.15 மணிக்கு சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் கிளம்பும் பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையத்தை வந்து அடைகிறார் இதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து 8:40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் காலை 9:00 மணிக்கு தூத்துக்குடி ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து அடைகிறார் இதற்கு அடுத்து 9:45 மணிக்கு தூத்துக்குடி வ உ சி துறைமுகவளாகத்தில் நடைபெறும் பல்வேறு அரசின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதிய முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. 10:35 மணிக்கு தூத்துக்குடி ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தடைகிறார்.

அங்கிருந்து 10:40க்கு தூத்துக்குடி ஹெலிகாப்டர் தளத்திலிருந்து இருந்து சுமார் 11:10 மணிக்கு நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்கிறார் அங்கிருந்து சாலை மார்க்கமாக 11:15 மணிக்கு நெல்லையில் நடைபெறும் பொது கூட்ட மேடைக்கு செல்கிறார் இதை தொடர்ந்து பொதுக் கூட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு 12:15 மணிக்கு திருநெல்வேலி ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தடைந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றடைகிறார். பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது மேலும் தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் விழா நடைபெறும் பகுதி பல்வேறு முன்னேற்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

Tags:    

Similar News