காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் விவரம் தாக்கல் செய்ய உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

Update: 2024-05-03 11:39 GMT

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் மூலம் ரூபாய் 306.32 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. காலி மதுபாட்டில்களை திருப்பி தரும் போது, அந்த கூடுதலாக வசூலித்த ரூ.10-யை திருப்பிக் கொடுக்கும், காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் நீலகிரி, கொடைக்கானல், மேகமலை உள்ளிட்ட மலை பகுதிகளில் கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டன. தற்போது 12 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளன என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தவர்களுக்கு 297 கோடியே 12 லட்சத்து 61 ஆயிரத்து 280 ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. விவரங்களை தெளிவாக தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி வழக்கின் விசாரணை ஜூன் 7 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
Tags:    

Similar News