தென்காசியில் தேவநேயப் பாவாணர் மணிமண்டபம் - அமைச்சர் சாமிநாதன்

தேவநேயப் பாவாணர் மணிமண்டபம் அவர் பிறந்த ஊரான தென்காசியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்தது, அது பரிசீலனையில் உள்ளது எனவும் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

Update: 2024-03-02 09:55 GMT

அமைச்சர் சாமிநாதன்

சென்னை தங்கசாலையில் உள்ள தமிழ்நாடு அரசு மைய அச்சகத்தில், எழுது பொருள் மற்றும் அச்சுத் துறைக்காக நிறுவப்பட்டுள்ள தெர்மல் CTP இயந்திரத்தை, அமைச்சர்கள் மு பெ சாமிநாதன் மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை சார்பில் அரசு மைய அச்சகத்தின் பயன்பாட்டிற்காக ரூ.1.95 கோடி மதிப்பில் Thermal CTP இயந்திரம் புதியதாக நிறுவப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமிநாதன், 2023-24 மானிய கோரிக்கையில் எழுது பொருள் மற்றும் அச்சு துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 1 கோடியே 95 லட்சம் மதிப்புள்ள தெர்மல் CTP இயந்திரம் புதிதாக அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் எழுதுகோல் அச்சு துறையில் புதிய மைல்கல்லாக இருக்க கூடும். 4 கலர்களில் இதில் அச்சிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது அரசுக்கும், மக்களுக்கும் பெரிதும் பயன்படும் 10 தளங்கள் கொண்ட குடியிருப்புக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, தேவநேயப் பாவாணர் மணிமண்டபம் அவர் பிறந்த ஊரான தென்காசியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்தது, அது பரிசீலனையில் உள்ளது எனவும் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News