ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வளர்ச்சிப்பணிகளை செயல்படுத்தவில்லை
இரண்டு பெரு வெள்ளங்கள் வந்தும் தமிழக அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த வளர்ச்சிப்பணிகளையும் செயல்படுத்தவில்லை என பாஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
அதிகமான குப்பை கிடங்குகள் தான் உருவாகிக் கொண்டிருக்கிறது. மேலும் குப்பைகளை அகற்றாமல் சாலையில் துர்நாற்றம் வீசும் அளவுக்கு உள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த சுத்தம் செய்யும் பணியில் பாஜ.,வினர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
பிரதமர் இன்று திருச்சிக்கு வரும் பொழுது முக்கிய தலைவர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். அதேபோல் முன்னாள் முதல்வர் இந்த அடிப்படையில் ஓ பன்னீர்செல்வம் வரவேற்பு அளிக்க இருப்பது தெரியவந்தது. பிரதமரை வரவேற்க முக்கிய தலைவர்கள் விரும்பினால் அவர்கள் வரவேற்க அனுமதிக்கப்படுவார்கள். மிக முக்கியமாக இரண்டு பெரு வெள்ளங்கள் வந்தும் தமிழக அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருமழை பெய்யும் என முன்னெச்சரிக்கை கொடுத்தும் தமிழ்நாடு அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் ஜீரோ சதவீதம் பணியில் ஈடுபடாமல் இருந்தார்கள். இது தமிழ்நாடு அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது என காட்டமான பதிலை தெரிவித்தார்.
இன்று திருச்சியில் இரண்டாவது புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மிக முக்கியமாக பெரிய விமானங்கள் இனி திருச்சி விமான நிலையத்திற்கு வரும்.மேலும் அதிக அளவில் விமான போக்குவரத்து பல்வேறு நாடுகளுக்கு இதன் மூலம் இயங்கும் என குறிப்பிட்டார்.