திருச்செந்தூா் கோவிலில் பக்தா் வழுக்கி விழுந்தது படுகாயம்!

திருச்செந்தூா் கோவில் வளாகத்தில் பெண் பக்தா் வழுக்கி விழுந்தததில் தலையில் பலத்த காயமடைந்தாா்.

Update: 2024-05-08 14:17 GMT

திருச்செந்தூா் கோவில் வளாகத்தில் பெண் பக்தா் வழுக்கி விழுந்தததில் தலையில் பலத்த காயமடைந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பகுதி வாட்டா் பால்ஸ் தெருவைச் சோ்ந்தவா் அனில்குமாா் (59). மத்திய அரசுத் துறை அதிகாரி. இவா் தனது மகள் ஷில்பா (31), அரசுப் பள்ளி ஆசிரியை. மருமகன் ஸ்ரீராஜ் (33), பேரக் குழந்தை ரிஷப் (1) மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூா் வந்து, தனியாா் விடுதியில் தங்கினாா். நேற்று அதிகாலை 5 மணிக்கு ஷில்பா, ஸ்ரீராஜ், ரிஷப் ஆகியோருக்கு முடிகாணிக்கை செலுத்திவிட்டு, தரிசனத்துக்காக கோயிலுக்கு வந்து கொண்டிருந்தனா்.

கவுண்டா் மடம் அருகே வந்த போது ஷில்பா வழுக்கி விழுந்ததில் தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக உடனடியாக முயன்றபோதும், சுமாா் அரை மணி நேரத்திற்கு பிறகே ஆம்புலன்ஸ் வந்தது. அதில் அழைத்துச் செல்லப்பட்டு, திருச்செந்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஷில்பாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னா் திருவனந்தபுரம் மருத்துவமனையில் ஷில்பாசிகிச்சை பெறச் சென்றாா்.

இது குறித்து அனில்குமாா் கூறியதாவது: பக்தா்கள் நடந்து செல்லும் பகுதியில் தரை வழுவழுப்பாக இருப்பதால் கீழே விழும் அபாயம் உள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டும். மருத்துவ தேவை மற்றும் அவசர காலத்திற்கு பயன்படும் வகையில் கோயிலில் 24 மணி நேரம் சிறிய வகை ஆம்புலன்ஸ் மற்றும் பேட்டரி காரை தயாா் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்றாா்.

இது குறித்து கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் கூறியது: திருச்செந்தூா் கோயிலில் மருத்துவ முதலுதவி மையம், தேவா் குடிலில் செயல்பட்டு வருகிறது. தற்போது கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணிகளில், கடற்கரை வாசல் அருகே மருத்துவ முதலுதவி மையமும், ராஜகோபுரம் எதிரில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையும் அமைக்கப்படவுள்ளது.

பேட்டரி காா்களும், மினி வேன்களும் பக்தா்கள் பயன்பாட்டுக்கு உள்ளஸ். 24 மணிநேரமும் செயல்படும் வகையில் ஆம்புலன்ஸ் வசதியும் விரைவில் தொடங்கப்படவுள்ளது. 

Tags:    

Similar News