திருத்தணியில் குவிந்த பக்தர்கள் - 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்.

பொங்கலை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் நேற்று பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்தது. சுமார் 5 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-17 06:37 GMT

பக்தர்கள் கூட்டம் 

திருத்தணி முருகன் கோவிலில், மாட்டு பொங்கல் விழாவை ஒட்டி மூலவருக்கு, அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்ககிரீடம், தங்வேல், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 6:00 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்பட்டது. பொங்கல் விழாவை ஒட்டி மூன்று நாட்களாக தொடர் விடுமுறை மற்றும் நேற்று செவ்வாய்க்கிழமை முருகருக்கு உகந்த நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக காலை முதலே ஆயிரக்கணக்கான வாகனங்களில் மலைக்கோவிலுக்கு வந்தனர். இதனால் தேர்வீதியில் பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க, ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், மூன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
Tags:    

Similar News