திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-09 01:08 GMT

திருச்செந்தூர் முருகன் கோவில் 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். திருச்செந்தூர் கோவிலுக்கு அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரவிடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்படும். அதே போல  வாரவிடுமுறை நாளான நேற்று  வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இதற்காக பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வழி என அனைத்திலும் வரிசையில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
Tags:    

Similar News