தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: அக். 7 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு
விவாகரத்து கோரிய நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7 தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-04-15 17:06 GMT
நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர், இவர்களுக்கு இரு மகன்களும் உள்ளனர். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமண பதிவை ரத்து செய்து அறிவிக்க வேண்டும் என கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். விவாகரத்து கோரிய நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7 தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விசாரணையை அக்டோபர் 7 தேதி தள்ளிவைத்து சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.