மனிதர்கள் சுமந்த வெள்ளிப் பல்லக்கில் தருமபுர ஆதீனம் பவனி

தருமபுர ஆதீனத்தை உருவாக்கிய கமலை ஞானப்பிரகாசர் குரு பூஜையை முன்னிட்டு 27 வது சன்னிதானம் மனிதர்கள் சுமக்கும் வெள்ளிப் பல்லக்கில் பவனி வந்து வழிபாடு செய்தார்.

Update: 2024-05-30 02:26 GMT

தருமபுர ஆதீனம் பவனி 

தருமபுர ஆதீனத்தை தோற்றுவித்த குரு கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தருமபுரம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் சமாதிகள் உள்ள இடத்தில் தருமபுரம் ஆதீனத்தை , பக்தர்கள் வெள்ளி நாற்காலி பல்லக்கில் சுமந்து செல்ல, மூன்று யானைகள், ஒட்டகம், குதிரை ஆகிய மங்கல சின்னங்கள் முன் செல்ல, ஆதீனத் திருக்கூட்டத்து அடியவர்களுடன் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினார்.

11ஆம் நாளான இன்று தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வலம் வரும் பட்டணப்பிரவேசம் நிகழ்வு இரவு 9 மணி அளவிலும், மறுநாள் அதிகாலையில் ஞான கொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

Similar News