திண்டுக்கல் சீனிவாசனின் குற்றச்சாட்டு நகைப்புக்கு உரியது: திருமாவளவன்
திண்டுக்கல் சீனிவாசனின் குற்றச்சாட்டு ஒரு அபாண்டமான அவதூறு என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Desk
Update: 2024-10-09 15:36 GMT

Thiruma
தி.மு.க. அரசை கண்டித்து மதுரை பழங்காந்தத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை அ.தி.மு.க. பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், " விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக அமைச்சர்களிடம் பணம் பெற்றுதான் மது ஒழிப்பு மாநாட்டையே நடத்தினார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் செய்தார். இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த விசிக தலைவர் திருமாவளவன், " திண்டுக்கல் சீனிவாசனின் குற்றச்சாட்டு நகைப்புக்கு உரியது. அது ஒரு அபாண்டமான அவதூறு" என்றார்.