பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து இயக்குனர் சசிகுமார் ஆறுதல்

நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என இயக்குனர் சசிகுமார் தெரிவித்துள்ளார்

Update: 2024-01-05 01:34 GMT

பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து இயக்குனர் சசிகுமார் ஆறுதல் கூறினார் 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இல்லத்தில் இயக்குனர் சசிகுமார் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் சசிகுமார் விஜயகாந்த் இறப்பு என்பது மிக பேரிழப்பு அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.  விஜயகாந்த் இருந்திருந்தால் முதலமைச்சராக ஆகிருப்பார் ஆளுமை மிக்க தலைவராக இருந்திருப்பார் என தெரிவித்தார். நடிகர் சங்கம் கடன் அடுத்தவர் விஜயகாந்த் அதனால் புதிய நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News