நகராட்சி துறை சார்பில் ரூ.10.6 கோடி பேரிடர் நிவாரண நிதி
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.10.6 கோடி பேரிடர் நிவாரண நிதியை முதல்வர் மு.க ஸ்டாலினிடம் அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 கோடியே 6 இலட்சத்து 27 ஆயிரத்து 472 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்திரகாந்த் காம்ளே, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஹனிஷ் சப்ரா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி. தட்சிணாமூர்த்தி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி. வினய், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் எஸ். சிவராசு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் மகேஸ்வரி ரவிக்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.