பாஜக வேட்பாளரக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு

தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணாக, அதிகளவில் செலவு செய்த பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் மீது தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-09 02:37 GMT

தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணாக, அதிகளவில் செலவு செய்த பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் மீது தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.


தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணாக, அதிகளவில் செலவு செய்த மத்திய சென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் தான் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் ஆணைய விளக்கத்தை பதிவு செய்து சுயேட்சை வேட்பாளர் அன்பழகன் வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். அதிகபட்சமாக ரூ. 95 லட்சம் செலவிடலாம் என்ற உச்சவரம்பை மீறி, தமிழ், ஆங்கில பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் ரூ. 2 கோடிக்கு விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாக மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வினோஜ் பி செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News