இரண்டு போலீசார் தொடர்ந்து பணியிடை நீக்கம் மாவட்ட எஸ்பி நடவடிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் கோட்டத்தில் தொடர்ந்து இரண்டு போலீசார் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் NBW வாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றவாளிகளை பிடிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள தனிப்படையில் ஏட்டு பிரபாகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு விபத்தில் பாதிக்கப்பட்ட இவரது நண்பரின் வாகனத்தை ரூ.4800 செலவு செய்து பழுது நீக்கவைத்தார். ஆனால் பாதிக்கப்பட்ட நண்பருக்கு ஆதரவாக மேலும் ரூ.5000 பணம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் உன் மீது வழக்கு பதிவு செய்ய இன்ஸ்பெக்டர் டிஎஸ்பி கூறிவிட்டனர் என்று சம்பந்தப்பட்ட நபரை பலமுறை மேல் அதிகாரிகள் பெயரை வைத்து மிரட்டியுள்ளார்.
இந்த மிரட்டல் ஆடியோ வாட்ஸ் அப்பில் வயிரலாக பரவியது. காவல் துறை மேல் அதிகாரிகளுக்கும் இந்த வாட்சப் செய்தி அனுப்பப்பட்டது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பிரபாகரன் மீது நடவடிக்கை எடுத்து பணி இடை நீக்கம் செய்துள்ளார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்து வரும் மரிய ஜோசப் என்பவர் அகணி பெண் சாராய வியாபாரி வீட்டிற்கு குடிபோதையில் சென்றுள்ளார்.
அங்கு பக்கத்து வீட்டிற்குள் நுழைந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். அக்கம்பக்கதினர் ஒன்று திரண்டு அவரை வீட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். சீர்காழி காவல் நிலையத்துக்கு தகவல் கூறினர், சீர்காழி போலீசார் அவரை அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மரியஜோசப்பும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது