தேர்தல் பணியில் பாரபட்சமின்றி பணிபுரிய வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
தேர்தல் பணியில் பாரபட்சம் இன்றி பணிபுரிய வேண்டும் என தேர்தல் அலுவலர் வளர்மதி தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ள அனைத்து நிலை அலுவலர்களும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினை கையாள்வதை முறையாக தெரிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடியில் ஒருவருக்கொருவர் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு அனைத்து படிவங்களையும் முறையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிவடைந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக சீல் வைத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இப்பயிற்சி வகுப்பில் அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். தேர்தல் பணிகளில் எவருக்கும் பாரபட்சமின்றி நேர்மையுடனும் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமலும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு அமைதியாகவும் பிரச்சினைகளின்றியும் நடைபெற வாக்குச்சாவடி அலுவலர்கள் இப்பயிற்சி வகுப்பினை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,"என தெரிவித்துள்ளார்.