100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர் ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்
விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Update: 2024-06-19 07:46 GMT
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிட்டு, விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில், 100 % வாக்களிக்கும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட வாக்களிக்கும் ஒரு விரல் உருவம் பொருத்திய செல்ஃபி பாயிண்ட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி.இ.ஆ.ப., ஒரு விரல் உயர்த்தி சுயபடம் எடுத்துக்கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் 100% வாக்களிக்குமாறு பொதுமக்களிடையே இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உடன் தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் யுவராஜ், சிறப்பு வட்டாட்சியர் ஜெயலட்சுமி உட்பட பலர் உள்ளனர்.