விவாகரத்து தம்பதிகள் - மகளின் பிறந்த நாளை சேர்ந்து கொண்டாட உத்தரவு

விவாகரத்தால் பிரிந்த நிலையில் தாயின் கட்டுப்பாட்டில் உள்ள மகளின் பிறந்தநாள் விழாவை குடும்பநல நீதிமன்றத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-06-24 03:11 GMT

பைல் படம் 

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த தம்பதியர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் நிலையில், தன்னுடைய குழந்தையை தந்தை பார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தையின் தாயார் வழக்கு தொடர்ந்தார். குழந்தைக்கு நாளை பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளில் தான் கலந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று குழந்தையின் தந்தை தரப்பு தெரிவித்துள்ளது. நிகழ்வு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலருக்கு நீதிபதி. உத்தரவிட்டார் 
Tags:    

Similar News