பத்ரகாளியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு

Update: 2023-11-13 05:27 GMT

பத்ரகாளியம்மன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் பத்ரகாளியம்மன் கோவிலில் உலக அமைதி, நாட்டு நலன், தோஷ நிவர்த்தி வேண்டி மிளகாய் வற்றல் கொண்டு பிரதி அமாவாசை தோறும் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று, பத்ர காளியம்மன், பெரியநாயகி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சவர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு, நடந்த நிகும்பலா யாகத்தில் ஏராளமான‌ பக்தர்கள் தோஷ நிவர்த்தி செய்து சுவாமியை வழிபட்டனர்.
Tags:    

Similar News