ராஜ்யசபா சீட் கேட்டு உறுதியாக நிற்கும் தேமுதிக
அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் தொடரும் இழுபறி; ராஜ்யசபா சீட் கேட்டு தேமுதிக உறுதியாக நிற்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக-வுடன் அதிமுக கூட்டணி வைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக கூட அதிமுக நிர்வாகிகள், பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது தேமுதிகவினர் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அதிமுக-வினர் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி வருகின்றனர் பாமக தேமுதிக என இரு கட்சிகளும் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க முடியாது என அதிமுக திட்டவட்டம் தேமுதிக தனக்கு சாதகமான தொகுதிகள் என தேர்வு செய்துள்ள 7 தொகுதிகளில் 3 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக இருப்பதாகவும் அதிமுக தரப்பில் தேமுதிக-விடம் வலியுறுத்தல் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு பதிலாக கூடுதலாக 1 நாடாளுமன்ற தொகுதி கூட ஒதுக்கீடு செய்வதாக தேமுதிகவுக்கு வலியுறுத்தப்பட் டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை விருதுநகர் கள்ளக்குறிச்சி என சாதகமான தொகுதிகளை பட்டியலிட்ட தேமுதிகவுக்கு மதுரையை வழங்குவது கடினம் எனவும் கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகர் தொகுதியை ஒதுக்க தயாராக இருப்பதாகவும் அதிமுக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.