போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்

கள்ளச்சாராய உயிரிழப்புகளை தவிர்த்து போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-06-19 15:19 GMT
பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை

தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளும், கஞ்சா போதை விற்பனையும் அதிகரித்துக்கொண்டேபோகிறது. இதனால் அனைவரின் கேள்விக்குறியாக இருக்கிறது. இதுபோன்ற காலகட்டத்தில் வாழ்க்கையும் கள்ளச்சாராயம் அதிகரித்துள்ளதால் தற்போது 5 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது இந்த அரசின் இயலாமையை காட்டுக்கிறது.

போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவது எனது லட்சியம் என்று சொல்லும் தமிழக முதல்வர், கள்ளச்சாராயத்தை தடுக்க கவனம் செலுத்துவதாகவே தெரியவில்லை. ஏற்கனவே கஞ்சா விற்பனை இதுவரைக்கும் இல்லாத அளவு தமிழ்நாடு மிக மோசமான நிலையில் உள்ள இந்த காலகட்டத்தில், தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் என்று இருக்கும்போது, கள்ளச்சாராயமும் அதிகரித்துள்ளதால் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே தமிழகத்தின் எதிர்காலம் எதை நோக்கி செல்கிறது என்கிற கேள்விக்குறி அனைவரின் மத்தியிலும் எழுகிறது. உடனடியாக அரசு இதில் கவனம் செலுத்தி டாஸ்மாக், கஞ்சா, கள்ளச்சாராயம் இதுபோன்ற போதைப் பொருட்களிலிருந்து தமிழகத்தை காப்பாற்றி தமிழக முதல்வர் சொன்ன வாக்குறிதிப்படி போதையில்லா தமிழகத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News