தி.மு.க. ஆட்சி குறித்து நடிகை குஷ்பு விமர்சனம்!
திமுக ஆட்சியில் எந்த நல்ல திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை என நடிகை குஷ்பூ விமர்சித்துள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-05 06:01 GMT

நடிகை குஷ்பு
வேலூரில் நடிகை குஷ்பூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர்," தி.மு.க. ஆட்சியில் எந்த நல்ல திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை. தி.மு.க.வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அங்கு பாதுகாப்பு இருந்திருந்தால் நான் ஏன் தி.மு.க.வில் இருந்து வெளியே வரப்போகிறேன். என் வீட்டின் மீது கல்வீசி எறிந்தபோது யாரும் வரவில்லையே. அனைத்து இடங்களிலும் மக்களிடையே எழுச்சி உள்ளது. பா.ஜனதா வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய மந்திரி ஆவார். தமிழகத்தில் பா.ஜனதாவிற்கு ஒரு எம்.பி. கூட கிடையாது. ஆனாலும் பிரதமர் மோடி சுமார் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி வழங்கி உள்ளார். பிரதமர் மோடியை பார்ட் டைம் அரசியல்வாதி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் இன்றைக்கு உலக தலைவர்களில் சிறந்தவராக பல்வேறு நாடுகள் பிரதமர் மோடியை தேர்வு செய்துள்ளது. பிரதமர் மோடி குடும்ப அரசியல் மூலமாக வரவில்லை. கச்சத்தீவு பிரச்சினை குறித்து தேர்தலுக்காக மட்டும் பேசவில்லை. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மத்திய ஆட்சியில் இருக்கும் போதுதான் கச்சத் தீவு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. இந்த முறை சிறுபான்மையினர் பா.ஜனதாவிற்கு அதிகளவு வாக்களிப்பார்கள்,"எனக் கூறினார்.