உச்சக்கட்ட டென்ஷனில் முதலமைச்சர் ஸ்டாலின் - திமுக கூட்டணிக்குள் குழப்பமா...?

தொகுதி பங்கீட்டில் விசிக, காங்கிரஸ் கட்சி அடம்பிடிப்பதால் திமுக கூட்டணியில் குழப்பம்

Update: 2024-03-07 07:57 GMT

திமுக கூட்டணி பேச்சுவார்த்தை

ஓரிரு நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதியாகவில்லை. அதற்கு விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளே காரணம் என்ற பேச்சும் அறிவாலயத்தில் அடிப்படுகிறது. அப்படி என்ன தான் கூட்டணி கட்சிகளுக்குள் பிரச்சனை நடக்கிறது என்பது விவாதமாகியுள்ளது.

இந்தியாவின் அடுத்த பிரதமரை நிர்ணயிக்கும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றனர். அதில் ஒருபகுதியாக தமிழ்நாட்டை ஆளும் திமுகவுடன் காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகள் கூட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

இந்த தேர்தலில் கூட்டணியில் வழக்கத்திற்கு மாறாக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுக, பாஜக கூட்டணியை முறித்துக் கொண்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் பாமக இணைந்துள்ளது. அதேநேரம், சிறுபான்மையினரின் வாக்குகளை பெற எஸ்டிபிஐ கட்சியுடன் அதிமுக கரம்கோர்த்துள்ளது.

அதேநேரம், திமுக கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகியதால், அதற்கு பதிலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுகவில் இணைய முடிவெடுத்துள்ளது. மொத்தமுள்ள 39 இடங்களில் திமுக 23 இடங்களிலும், பிற கூட்டணி கட்சிகள் 17 இடங்களிலும் போட்டியிட முடிவெடுத்துள்ளன.

அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், ஐ.யு.எம்.எல். கட்சிக்கு ராமநாதபுரமும், கொமதேக கட்சிக்கு நாமக்கல் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளும், விசிகவுக்கு 2 தொகுதிகளும், மதிமுகவுக்கு ஒரு தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் இருந்து ஒன்றை தனக்கு வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்கிறது. தனக்கான தொகுதியை விட்டு கொடுக்க காங்கிரஸ் மறுத்து வருகிறது. இந்த குழப்பத்திற்கு இடையே தங்களுக்கு கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்வதுடன் தங்களின் சின்னத்தில் தான் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று விசிக பிடிவாதம் காட்டுகிறது.

இப்படி திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிடிவாதம் காட்டி வருவதால், திமுக கூட்டணியை இறுதி செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதற்கிடையே, தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க அறிவாலயம் வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருவதாக இருந்தது. ஆனால், அதற்கு மதிமுக மற்றும் விசிக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராததால், டெஷ்னான முதலமைச்சர் ஸ்டாலின் தனது வருகை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News