Parliament Election 2024:திமுக Vs அதிமுக - சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்

போட்டிக் போட்டுக் கொண்டு தமிழக மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கை தயாரான திமுக, அதிமுக கட்சிகள்

Update: 2024-02-05 10:55 GMT

திமுக, அதிமுக

Parliament Election 2024: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசிய கட்சிகள் மட்டுமில்லாமல் மாநிலத்தின் பிரதான கட்சிகளும் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக கட்சிகளைParliament Election 2024:

 தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், போட்டிப்போட்டுக் கொண்டு மக்களை சந்தித்து வருகின்றLEன. நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் நம்பும் விதமாக கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும், அறிவிப்புகளையும் வழங்கும் விதமாக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் திமுக மற்றும் அதிமுக ஈடுபட்டுள்ளன. 

தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னதாக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அதிமுக, அதிமுக கட்சிகள், மக்களை சந்தித்து அவர்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகள் குறித்து கருத்து கேட்க உள்ளனர். அதன்படி விவசாய சங்கங்கள், மீனவ பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், தொழில் முனைவோர், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து தேர்தல் பிரதிநிதிகள் கருத்து கேட்க உள்ளனர். 

அந்த வகையில் திமுக தரப்பில் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழு தேர்தல் அறிக்கையை தயாரிக்க மக்களின் பரிந்துரைகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அல்லது அண்ணா அறிவாலயம், தொலைப்பேசி எண் உள்ளிட்டவற்றின் மூலம் தங்களின் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம் என்றும், அதை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பரிசீலனை செய்யும் என கூறப்பட்டுள்ளது. 

மக்கள் தங்களின் கருத்துகளை தேர்தல் அறிக்கை குழுவுக்கு அனுப்புவதற்கு முன்னதாக, தேர்தல் அறிக்கை குழு இன்று முதல் மக்களை சந்தித்து கலந்துரையாட உள்ளனர். முதற்கட்டமாக தூத்துக்குடியில் மக்களின் கருத்தை நேரில் கேட்கும் தேர்தல் அறிக்கை குழு, அடுத்ததாக ராமநாதபுரம், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்ருப்பயணம் சென்று அறிக்கை தயாரிக்க உள்ளன.  சென்னையில் மட்டும் வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை தேர்தல் அறிக்கை குழுவின் சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. 

இப்படி திமுக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், மற்றொருபுறம் திமுகவுக்கு போட்டியாக அதிமுகவும் தங்கள் பங்குக்கு தேவையானதை செய்து வருகின்றனர். திமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், சிவி சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன் ஆர். பி. உதயகுமார், வைகை செல்வன் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். 

இந்த குழு மக்களின் கருத்து கேட்க இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இன்று தொடங்கி 1ம் தேதி வரை நடைபெறும் சுற்றுப்பயணத்தில் மக்களின் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. முதற்கட்டமாக இன்று காலை சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதிமுக தேர்தல் அறிக்கைக் குழு பயணம் மேற்கொள்ள உள்ளது. இதனையடுத்து இன்று மாலை வேலூருக்கு இந்தக் குழு பயணம் மேற்கொள்ள உள்ளது. நாளை விழுப்புரம் மண்டலத்திலும், 7 ஆம் தேதி தஞ்சாவூர், திருச்சி மண்டலத்திலும், 8 ஆம் தேதி கோவை, மதுரை மண்டலத்திலும், 10 ஆம் தேதி திருநெல்வேலி மண்டலத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். 

இப்படி போட்டிக் கொண்டு அதிமுகவும், திமுகவும் மக்களை சந்தித்து வாக்குருதிகளை பெற தயாராகி வருகின்றனர். 

Tags:    

Similar News