பத்திரிக்கையாளர் மீது திமுகவினர் தாக்குதல்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திமுக கவுன்சிலர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதை வீடியோ எடுத்த செய்தியாளர் மீது திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர்;

Update: 2024-03-14 05:04 GMT

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 60- ஆவது வாா்டு திமுக உறுப்பினா் காஜாமலை விஜய் பேசுகையில், எனது வாா்டுக்குள்பட்ட பகுதியில் எந்த வேலையும் நடைபெறவில்லை. மக்களுக்கு பதில் கூற முடியவில்லை. மாநகராட்சியில் தெரிவித்தும் எதுவும் நிறைவேறவில்லை. ஆகவே எனது பதவியை நான் ராஜிநாமா செய்கிறேன் எனக் கூறிவிட்டு, ராஜிநாமா கடிதத்தை ஆணையா் மற்றும் மேயரிடம் வழங்கினாா்.

Advertisement

இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறிவிட்டு அரங்கத்தைவிட்டு வெளியே வந்தாா். பிறகு மாநகராட்சி வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது காரில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா்.

உடனே சக உறுப்பினா்களும் அக்கம் பக்கத்தினரும் அவரை தடுத்துநிறுத்தி தண்ணீரை ஊற்றினா். இதனை செய்தி சேகரிக்க செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்த செய்தியாளரை தாக்கிய திமுகவினர், அவரது செல்போனை பறிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

Similar News