பீடி சுற்றிய திமுக வேட்பாளர் !

பேரணாம்பட்டில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் பிரச்சாரம் செய்தபோது, பீடி சுற்றும் தொழிலாளியுடன் தரையில் உட்கார்ந்து, பீடி சுற்றி கொண்டே வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-06 08:03 GMT

பேரணாம்பட்டில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் பிரச்சாரம் செய்தபோது, பீடி சுற்றும் தொழிலாளியுடன் தரையில் உட்கார்ந்து, பீடி சுற்றி கொண்டே வாக்கு சேகரித்தார். 

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டு ஒன்றியம் பல்லலகுப்பம், பொகளூர், கார்கூர் உள்பட பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ஒரு வீட்டில் பீடி சுற்றும் தொழிலாளியுடன் தரையில் அமர்ந்து பீடி சுற்றி கொண்டே அவரிடம் தி.மு.க. அரசின் திட்டங்களை எடுத்துக்கூறியும், அவரின் குறைகளை கேட்டும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தார்.
Tags:    

Similar News