மார்ச்சில் திமுக வேட்பாளர் நேர்காணல்??
திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு இந்த வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மார்ச் 2 வது வாரத்தில் திமுக சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர்களின் நேர்காணல் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Update: 2024-02-26 04:19 GMT
நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. திமுக காங்கிரஸ் கட்சியுடன் ஓரிரு நாளில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையை நடத்துகிறது . ஒரு வாரத்திற்குள் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று அடையாளம் கண்டு தொகுதி பங்கீடை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. மார்ச் 2 வது வாரத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வுக்காண நேர்காணலை நடத்த திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.