உள்ளாட்சி தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி - ஈவிகேஎஸ் இளங்கோவன்

உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும். மத்திய அரசு இன்னும் ஐந்து மாதங்களில் கவிழ்ந்து விடும்.அமத்ஷா மற்றும் உட்கட்சியினராலேயே ஆட்சி கவிழும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

Update: 2024-06-15 02:08 GMT

ஈவிகேஎஸ் இளங்கோவன்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டிலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை வேறு அர்த்தத்தில் பேசவில்லை என கூறிவிட்டார் என்பதால் என்னைப் பொறுத்தவரை அந்த பிரச்சனைக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன் என்றார்.

காங்கிரஸ் கட்சி வளர்ப்பதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்து செயல்படுவோம் என்றார். உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் என்றார். தொடர்ந்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் , மத்திய அரசு இன்னும் ஐந்து மாதங்களில் கவிழ்ந்து விடும் என்றும் நித்திஷ் , சந்திராபாபு நாயுடு மட்டும் ஆட்சியை கவிழ்க்க மாட்டார்கள் என்றும் அமத்ஷா மட்டும் உட்கட்சியினராலேயே ஆட்சி கவிழும் என்றார்.தமிழிசை சௌந்தர்ராஜனை அமித்ஷா மேடையில் அனைவரும் முன்னாலே கையை காட்டி மிரட்டி பயமுறுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாம் தமிழர் கட்சி ஒரு மாநில கட்சியாக அந்தஸ்து பெற்றதை வரவேற்பதாகவும், விரைவில் தேசியக் கட்சியாக வளர வாழ்த்துவதாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.



Tags:    

Similar News